மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்?? - Asiriyarmadal

Latest

Tuesday, 14 December 2021

மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்??

 மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்??





கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரி கட்டையை வைத்து கொண்டு செல்வது 

நமது முன்னோர்கள் நமக்கு கத்துகொடுத்த பாடம். 


அப்படி கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு.. 


கரி கட்டை என்பது கார்பன் c2 கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வாசனையை கூடையிலே வைத்திருக்கும் வெளியே அனுப்பாது.. 


அதே போல தான் பெண்கள் மல்லிகை பூ அதிகமாக பயன் படுத்தினால் ஒரு சிறிய கரிக்கட்டை துண்டை அவர்கள் தலையில் வைத்து பயன்படுவதும் வாசனையை வெளிய அனுப்பாமல் இருப்பதற்காக மட்டுமே

காத்து கருப்புக்காக இல்லை...


இவ்வளவு ஏன்....??

 இன்றளவும் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் காலையில் பல் விலக்குவது கரிக்கட்டையிலும் சாம்பலிலும் தான்.


கரியில் உள்ள கார்பன் பல்லில் உள்ள துர்நாற்றத்தை வெளியேற்றும்.. 


பல்லில் பூச்சினை அண்ட விடாமல் பார்த்து கொள்ளும்..


இப்பொழுது சொல்லுங்கள் நமது முன்னோர்களின் செயலுக்கு பின்னால் ஏதேனும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கத்தானே செய்கிறது.

No comments:

Post a Comment